வடக்கு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு விரைவில் கிடைக்கும்!

வடக்கு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் உரிய தீர்வு வழங்கும் என மின்சக்தி வலுவூட்டல் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு சென்ற அவர், ஐக்கிய தேசிய கட்சி ஆதராளர்கள், உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வடக்கு மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த அரசாங்கம் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் என்றும் கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில், பயங்கரமான சூழல் நிலவியதாகவும், ஆனால் இப்போது அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமையை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.