உயர் நீதிமன்றில் இருந்து வாபஸ் பெறப்பட்ட மகிந்தவின் மனு

தனக்கு பிரதமர் பதவி மற்றும் அமைச்சுப் பதவி என்பவற்றை ஏற்று நடப்பதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கிக் கொள்ளுமாறு உத்தரவிட வேண்டி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு நேற்று உயர் நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மனு பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் கொண்ட குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.