இலங்கையில் புதையல் தோண்டிய நால்வருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! வெளியான அதிரடி தகவல்

ஹினிதும பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்கல்ல, தலங்கம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் புதையல் பெறும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட நான்கு நபர்களை திடீரென பொலிஸார் சுற்றிவளைத்து பிடித்ததால் அதிர்ச்சியில் இருந்தனர்.

நேற்று மாலை ஹினிதும பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 14, 21, 25 மற்றும் 75 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்கள் தங்காலை, மீகொட மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், ஹினிதும பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.