யாழ் பல்கலைகழகத்தில் பகிடிவதையால் திசை திருப்பப்படும் மாணவர்கள்...வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடி வதை என திட்டமிட்ட பிரச்சாரங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கவலையளிப்பதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு நீதி வேண்டியும் உரிமையைப் கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் பேரணிகள் ஊர்வலங்கள் என்று பல்கலைக்கழக மாணவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் திசை திருப்புவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகிறது.

ஆகவே இவ்வாறான பிரச்சாரங்களை கவனத்திற் கொள்ளாது மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள எழுச்சி போரணிக்கு சகல தரப்பினர்களும் தம்மை ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி பேரணியில் பங்கெடுக்குமாறும் மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது .இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.