வெளிநாட்டில் வேலை செய்யும் கணவனுக்கு இலங்கை மனைவியால் காத்திருந்த பேரதிர்ச்சி

வவுனியாவின் நெளுக்குளம் சுற்றுவட்ட வீதி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இரு பிள்ளைகளின் தாயொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர்.இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு 11.30 மணிக்கு பின்னர் குறித்த பெண்ணிற்கு கணவர் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். எனினும் பெண் அழைப்பினை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சந்தேகத்தில் அயல் வீட்டார் ஒருவருக்கு, பெண்ணின் கணவன் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு மனைவி தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை சற்று சென்று பார்க்குமாறு கேட்டுள்ளார்.

அயல் வீட்டார் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நேரத்தில் பெண்ணின் இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கி கொண்டிருந்த போதும், பிள்ளைகளின் தாயை காணவில்லை என தெரிவிக்கின்றனர்.

அவரை தேடிய நிலையில் வீட்டிலுள்ள அறைகளை சென்று பார்த்த போது ஒரு அறையில் இரத்தம் காணப்பட்டுள்ளது.

இதன் பின்னரே பாவனையற்ற கிணற்றில் சடலம் மிதப்பதை அயலவர்கள் பார்த்துவிட்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரினால் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிசாரால் கிணற்றுக்கு செல்லும் பாதையில் இருந்து கத்தியொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இரு பிள்ளைகளின் தாயை வெட்டிக்கொலை செய்து விட்டு கிணற்றில் தூக்கி வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.