வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அதிரடி தண்டனை! நீதிமன்றத்திலே கதறி துடித்த பெண்

டுபாய் நீதிமன்றம் ஒன்று இலங்கை பணி பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.குறித்த பெண் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரின் மோட்டார் வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.தான் இந்த சம்பவத்திற்கான குற்றாவாளி அல்ல என இலங்கை பெண் நீதிமன்றத்தில் குறிப்பபிட்டுள்ளார்.

மோட்டார் வாகனத்தில் இருந்து வெளியேறிய புகையை தான் அவதானித்ததாகவும், அதனை தான் அணைக்க முயற்சித்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகிய இலங்கை பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5000 டிராம் அபராதம் விதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர் இலங்கைக்கு நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.