இலங்கை விமான சேவையில் 34 வருடங்களின் பின் ஏற்பட உள்ள மாற்றம்

இலங்கையின் விமான சேவையில் உள்ள சர்வதேச விமான சேவைகள் மற்றும் ஏனைய விமான சேவைகளில் அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றமை குறித்து போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயம்பத்தி எமது செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அடுத்த மாதமளவில் திருத்தங்களை உள்ளடக்கிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் முன்வைக்கப்பட உள்ளது.

இலங்கையில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற விமானங்களில், அதன் தன்மையின் அடிப்படையில் 100 முதல் 120 அமெரிக்க டொலர்கள் வரை கட்டணங்கள் அறிவிடப்படுகின்றன.

இதனூடாக குறித்த விமான சேவைகள் வருடாந்தம் 13 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனை இரு மடங்காக அதிகரித்து 26 மில்லியன் டொலர் வரை வருமானம் ஈட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளனது.

குறித்த கட்டணங்கள் தொடர்பான மாற்றங்களானது, கடந்த 34 வருடங்களுக்கு முன்னரே இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், குறித்த கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றமை குறித்து போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.