லண்டன் - லூட்டன் விமான நிலையத்தில் இலங்கையர்களிடம் தீவிர விசாரணை

பிரித்தானிய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன.

தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

குறித்த நான்கு இலங்கையர்களும் பெட்ப்வேச்சர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

லண்டன், லூட்டன் விமான நிலையத்தில் வைத்தே குறித்த நான்கு இலங்கையர்களும், பிரித்தானிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

2000ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு இணங்க குறித்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, துருக்கியின் மேற்கு பகுதியிலுள்ள ஏடன் பகுதியின் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், மொரக்கோ, ஈரான், ஈராக் பாலத்தீனம், எகிப்து மற்றும் டினிசியா ஆகிய நாடுகளை சேர்தவர்கள் உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 51 சிரிய நாட்டவர்களும், 37 ஆப்கானிஸ்தானியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவில் உள்நாட்டு போர் ஆரம்பித்துள்ளமையே ஐரோப்பிய நாடுகளுக்கு பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் அதிகரிப்புக்கு காரணம் என கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 558 பேரிடமும் விசாரணைகள் இடம்பெறுவதாக அந்த நாட்டு பாதுகாப்புதுறை அறிவித்துள்ளது. விசாரணைகளின் பின்னர், அவர்கள் தொடர்பான மேலதிக விடயங்கள் முன்னெடுக்கப்படும் என துருக்கி பாதுகாப்புதுறை அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இவ்வாறு துருக்கி ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்த இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.