நாடு முழுவதும் 170 சாரதிகள் கைது

நேற்று மாலை 06 மணி தொடக்கம் காலை 06 மணி வரை 24 மணித்தியாலத்தில் காவற்துறை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேலம் பல குற்றம் தொடர்பில் 3 ஆயிரத்து 36 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.