மிக முக்கிய விமானக் கொள்வனவில் இலங்கை!! காரணம் என்ன?

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில் டோனியர் ரக கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா நடவடிக்கை மேற்கொள்வதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மட்டுமல்லாது, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளுடனும் தமது பாதுகாப்பு உறவை பலப்படுத்துவது இந்தியாவின் நோக்கம் என ரைம்ஸ் நவ் ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் அழுத்தங்கள் அதிகரிப்பதன் காரணமாக, இலங்கையுடன் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதுடன், பங்களாதேஷுடனும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில். இலங்கைக்கு வழங்கத் திட்டமிட்டுள்ள டோனியர் ரக விமானம், ஜேர்மனியின் அனுமதிப் பத்திரத்துடன், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

இதனூடாக சமுத்திர மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை மிகவும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை பலப்படுத்தும் நோக்கில் மித்ர சக்தி கூட்டு கடற்படை பயிற்சியை இந்தியா அண்மையில் மேற்கொண்டிருந்தது.

அத்துடன், இலங்கையின் இராணுவத்தினரும், அவர்களின் குடும்பத்தினரும் புத்தகயா மற்றும் லும்பினி முதலான தளங்களில் சுற்றுலா மேற்கொள்ளவும் இந்திய நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.