சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை – கொடகம வெளியேறும் வாயிலுக்கு அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கொக்மாவதுவ வெளியேறும் வாயிலை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரச சபை, சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரை நிர்மாணிக்கப்பட்டு வரும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் நிர்மாண பணிகள் இடம்பெற்றுவருவதால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கொடகம வெளியேறும் வாயிலுக்கு அருகில் வரும் போது வேகம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு காவல்துறை, சாரதிகளிடம் கோரியுள்ளது.