இறுதி நேரத்தில் இரத்தான ஜனாதிபதி - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்- சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வினை தொடர்ந்து, அதிகாரப் பகிர்வு ஆவணம் தொடர்பாக ஆராயும் கூட்டத்தை ஏற்பாடு செய்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் பேசவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

ஆனாலும் ஜனாதிபதியுடனான குறித்த தனிப்பட்ட சந்திப்பு நேற்று இடம்பெறவில்லை.

புத்தாண்டு நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.