இலங்கையில் அமுலாகும் புதிய சட்டம்!

திட உணவு மற்றும் அரை திட உணவிற்குமான வர்ண குறியீட்டு முறை அமுல்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதற்காக பிஸ்கட் மற்றும் இனிப்பு உணவு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

தற்போது மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவிற்கு அமைய வர்ண குறியீடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.