மதுபோதையில் தேரரை தாக்கிய சகோதரர்கள்

மதுபோதையில் விகாரைக்குள் வந்து தேரர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜாங்கனை – சுதர்ஸனாராம விகாரையை சேர்ந்த தேரரே இன்றைய தினம் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் என்பதுடன், மதுபோதையில் விகாரைக்குள் நுழைய வேண்டாம் என தேரர் எச்சரித்துள்ளதால் அதற்கு கோபமடைந்து இருவரும் தேரரை தாக்கியுள்ளனர்.

இதனை தடுக்க முயன்ற மேலும் ஒரு நபரையும் அவர்கள் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.