இலங்கையில் இன்று காலை நித்திரை கலக்கத்தால் கணவன் - மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்

பண்டாரகம – கம்மன்பில பிரதேசத்தில் சிற்றூர்தியொன்று வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாயில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் அதில் பயணித்த கணவரும், மனைவியும் காயமடைந்து பண்டாரகம மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கதிர்காமத்திற்கு சென்று மீண்டும் திரும்பி கொண்டிருந்த வேளை, சிற்றூர்தியை செலுத்திய கணவருக்கும் நித்திரை கலக்கம் ஏற்பட்டுள்ளதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம காவல்துறை மேற்கொண்டு வருகிறது.