கொழும்பை குசிப்படுத்திய கடந்த 24 மணி நேரம்

கடந்த 24 மணி நேர பகுதியில் நாட்டில் அதிக மழை வீழ்ச்சி கொழும்பு கோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர பகுதியிலேயே இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் அளவு 23.5 மி.மீ. எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளைய தினம் நாட்டில் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.