தற்பொழுதுள்ள தகுதியான ஒரே தலைவர் ரணில்!!

பிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் தற்பொழுதுள்ள தகுதியான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்து வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிக்கப் போவதாக தெரிவிக்கப்படும் கருத்துக் குறித்து மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு தலைவர் தான் இருக்கின்றார். அவர் ரணில் விக்ரமசிங்க மட்டும்தான். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது. இதுபோன்ற பொய்யான செய்திகளை அவிழ்த்து விடுகின்றனர். இருப்பினும், கட்சியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன். தாய் தந்தையர்களின் பெயரைக் காட்டி எமது கட்சியை முன்னுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.