யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

யாழப்பாண மாவட்ட மக்களுக்கு முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட காச நோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரியால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் காச நோய் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.அத்துடன், யாழில் காசநோய் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“இவ்வருடம் முதல் மூன்று மாதங்களில் 91 காச நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 8 பேர் காச நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதேவேளை கடந்த வருடம் 303 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காசநோய் வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை, ஆளணி பற்றாக்குறை நிலவுவதால் காச நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.