வெளிநாட்டு அமைப்புக்களுக்கும் குண்டு வெடிப்பில் தொடர்பா? தற்கொலையாளிகளின் உடலில் எழுதபட்டிருந்த வசனத்தால் பரபரப்பு

இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுடன் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களும் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உள்ளூர் தீவிரவாத அமைப்புக்களை, வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்கள் பின்னணியில் இருந்து இயக்கியதாக தெரிகிறது. இது குறித்த அறிக்கை புலனாய்வு அமைப்புக்களால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்தாரிகளும் உள்ளூர்வாசிகளே என்பதையும் புலனாய்வுப்பிரிவு உறுதிசெய்துள்ளது. தற்கொலையாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்களின் உடலில் மாஷா அல்லாஹ் ன அரபு மொழியில் பச்சை குத்தப்பட்டுள்ளது.

இதனால், இலங்கையிலிருந்து ஆட்களை தெரிவு செய்து, வெளிநாடொன்றில் பயிற்சியளித்து, இந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாமென்று ஊகிக்கப்படுகிறது.