நாட்டின் அனைத்து வீடுகளிற்கும் பேரிடியான செய்தி!! மைத்திரியின் அதிரடி உத்தரவு..

நாடு பூராகவும் தற்போது முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் நாட்டின் அனைத்து வீடுகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக பிரிவின் ஊடாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, வீடுகளின் நிரந்தர குடியிருப்பாளர்களின் பட்டியலொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் எந்த இடங்களிலும் வாழ முடியாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.