குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் அதிரடியாக இடமாற்றம்

கடந்த சில நாட்களாக குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களையடுத்து, குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று களுத்துறை பயிற்சி கல்லூரியின் பிரதி பணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நுகேகொடை அதிகாரி குளியாப்பிட்டிய பிரிவு பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.