சி.ஐ.டி.யில் ஒப்படைக்கப்பட்டார் நாமல்குமார

வர­கா­பொல பகுதியில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட நாமல்குமார விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வட மேல் மாகா­ணத்தில் குரு­ணாகல் மாவட்டம், குளி­யாப்­பிட்டி மற்றும் நிக்­க­வ­ரட்டிய பகு­தி­களில் முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்து திட்­ட­மிட்ட குழு­வொன்று முன்­னெ­டுத்த தொடர் தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான பிர­தான விசா­ர­ணை­க­ளுக்­காக, மஹ­சொஹொன் பல­காய எனும் அமைப்பின் தலைவர் வித்­தா­ரண பத்­தி­ர­ண­லாகே அமித் ஜீவன் வீர­சிங்­கவும், ஊழ­லுக்கு எதி­ரான படை­ய­ணியின் நட­வ­டிக்கை பணிப்­பா­ளரும், ஜனா­தி­பதி கொலை சதி ஒன்று தொடர்பில் வெளிப்­ப­டுத்­தி­ய­வ­ரு­மான அத்­த­நா­யக்க முதி­யன்­ச­லாகே நாமல் குமார மற்றும் புதிய சிங்­ஹலே அமைப்பின் தலை­வ­ரான லிய­னகே அபேகோன் சுரேஷ் பிரி­யஷாத் எனப்­படும் டேன் பிரி­யஷாத் ஆகியோர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.