நான்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

மேல், மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.