தொடர்ந்து நான்கு நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு

விசாக பூரணை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் 4 நாட்கள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி ஆணையாளர் கப்பில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.