முழுமையாக கட்டுபடுத்தப்பட்டுள்ள வன்முறை - ரணில்

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழும் அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாருக்கு இன்று -15- உத்தரவிட்டுள்ளார்.

மே மாதம் 12, 13 ஆம் திகதிகளில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், தற்போது பொலிஸார், முப்படையினரின் தலையீட்டுடன் முழுமையாக கட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யபட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.