வடமேல் மாகாண வன்முறை : 78 பேர் கைது

வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்ட குழுக்கள் முன்னெடுத்த தொடர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளில் இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல், நிக்கவரட்டிய, சிலாபம், புத்தளம் மற்றும் குளியாபிட்டிய ஆகிய பொலிஸ் வலயங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் அவ்வந்த நீதிமன்றங்களில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.