ரிஷாத்துக்கு எதிரான பிரேரணைக்கு முழு ஆதரவு! பொதுஜன பெரமுன

அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பொதுஜன பெரமுனவினர் முழுமையாக ஆதரவு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நம்பிக்கையினை பாதுகாக்கும் வகையில் ஆளும் தரப்பினரும் தற்போதைய நிலையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது. சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பொதுஜன பெரமுன சார்பில் முழுமையான ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இதன்போது ஏகமனதாக நம்பிக்கையில்லா பிரேரனையை முன்வைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.