முஸ்லிம் சிவில் சமூகம் அதிரடி அறிவிப்பு

நான் தேசிய அரசியலில் உள்ள அரசியல்வாதி. சில ஆத்மார்த்த தேடல்களை செய்ய நாம் வெட்கப்படுவதில்லை. கடந்த காலங்களில் நாம் தவறுகள் செய்திருக்கலாம்.

அவற்றை சரிசெய்ய தயாராகவே இருக்கிறோம் என தெரிவித்துள்ளார் அமைச்சர் கபீர் ஹாஷிம்.

முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்துள்ள பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

எங்கள் சமூகமும் மதத் தலைவர்களும் மற்ற சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை நீக்குவதை நோக்கி வேலை செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, “நாங்கள் ஒரு தாயின் குழந்தைகளே என எங்கள் தேசிய கீதம் கூறுகிறது.

ஒரு தாயின் பிள்ளைகள் என்றால், நம்மைப் பிரிக்கக் கூடிய தனிப் பாடசாலைகள் இருக்கக்கூடாது. நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும்“ என்றார்.