ரிஷாட்டிற்கு எதிரான பிரேரணையில் கூட்டமைப்பு உறுப்பினர் கையெழுத்து

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் கையெழுத்திட்டுள்ளார்.

64 பேரின் கையெழுத்துடனான பிரேரணையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனும் கையெழுத்திட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரரின் தலைமையில் கொண்டுவரப்பட்ட அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.