இலங்கை புகையிரத வரலாற்றில் புது அத்தியாயம்!

இலங்கை புகையிரத திணைக்களத்தின் பாவனைக்காக இந்தியாவில் இருந்து 5 ராங் கார்கள், 10 பிளாட் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவை இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இலங்கை புகையிரத வரலாற்றில் இது புது அத்தியாயம் என, திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட சரக்கு விநியோக நடவடிக்கைக்கு இவற்றை பயன்படுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.