ஹிஸ்புல்லாவின் கிழக்கு அட்டகாசத்திற்கு அனுமதித்தது யார்!! களத்தில் குதித்தார் முக்கிய புள்ளி

ஆளுநர் ஹிஸ்புல்லா தாமாகவே முன்வந்து ஊடகங்களுக்கு சொல்லியிருக்கிறார், அவரது பல்கலைக்கழகத்திற்கு யார் அனுமதி தந்தது, யார் உதவி செய்தது என்று.

ஆனால் அரசாங்கம் இந்த பிரச்சினையை மறைப்பதற்காக ஏனையவற்றை போன்று இதனையும் மகிந்த ராஜபக்ச கணக்கில் போடுவதற்கு முயல்கிறது.

இந்த அரசாங்கத்தின் பிரச்சினையே இது தான். இந்த நேரத்தில் மகிந்த ராஜபக்சவை பழிவாங்குவதால் நாட்டின் தற்போதைய பிரச்சினைகள் தீர்ந்து விடாது.

மகிந்த ராஜபக்சவுக்கு பேசுவதன் ஊடாக அரசாங்கத்தினால் நாட்டு மக்களை பாதுகாத்து விட முடியாது. இங்கு நடக்கும் அனைத்தையுமே ராஜபக்ச காலத்தில் நிறுத்தவில்லை. ஏன் இப்பொழுது எங்களை கேட்கிறார்கள் என பேசுவதால் இந்த பிரச்சினைகள் தீர்ந்து போகாது.

அரசாங்கம் இதனை புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது சரி மகிந்த ராஜபக்சவுக்கு பேசுவததை நிறுத்தி குற்றச்சாட்டுகளை அவர் மீது போடுவதை நிறுத்தி பிழை செய்தவர்கள் யார் என்று தெரிந்து கொண்டு, பிழைகளை திருத்தி இந்த மக்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

ஆனால் இன்று வரை அரசாங்கம் அதனை செய்யவில்லை. இன்றும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் மகிந்த ராஜபக்சவை குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கின்றனர்.