சகரானுடன் இணைந்து ஹிஸ்புல்லா இலங்கை முழுவதும் செய்த திடுக்கிடும் செயல்! ஆதாரங்களுடன் சுமனரத்ன தேரர்

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சம்பந்தன், வடக்கு மாகாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் போன்றோர் அமைதியாக இருக்கின்றனர் எனவும் அதேபோல் தமிழ் மக்களின் தலைவர்களான அரசியல்வாதிகள் அமைதியாக இருக்கின்றனர் எனவும் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராம விகாரையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இவர்கள் இப்படி அமைதியாக இருக்கும் பொழுது சஹ்ரானுடன் இணைந்து கிழக்கில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் பெரிய அழிவை ஏற்படுத்த தலைமைத்துவத்தை வழங்கிய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, இலங்கை அரசாங்கத்திற்கு ஷரியா பல்கலைக்கழகத்தை சுவீகரிக்க முடியாது என்று கூறுகிறார்.

அவர் எந்த நம்பிக்கையில் இதனை கூறுகிறார். ஹிஸ்புல்லா தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த நிலத்திலா இந்த ஷரியா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு சொந்தமான காணிகளை மகாவலி அதிகார சபையின் ஊடாக ஹிஸ்புல்லா தனது பெயரில் மாற்றிக்கொண்டு, இந்த ஷரியா பல்கலைக்கழகத்தை அமைத்துள்ளார்.

அரசாங்கத்தின் சொத்தில் இந்த பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்படுகிறது. தனது நோக்கத்திற்கு அமைய பல்லைக்கழகத்தை கொண்டு நடத்துவதே ஹிஸ்புல்லாவின் குறிக்கோள் எனவும் சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.