ரிசாட்டைக் காப்பாற்றினார் சம்பந்தன்! காரணம் வெளியானது?

ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்காது என இரா.சம்பந்தன் வாக்குறுதியளித்துள்ளார்.

இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ரிசாட் பதியுதீனிடம் இந்த வாக்குறுதியை இரா.சம்பந்தன் வழங்கினார்.

ரிசாட் பதியுதீனிற்கு எதிராக கூட்டு எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, தனக்கு ஆதரவு திரட்டி ரிசாட் சிறுபான்மைக்கட்சிகள் அனைத்துடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இதன்படி, இரா.சம்பந்தனுடனும் தொலைபேசியில் பேசினார்.

இதன்போது, இரா.சம்பந்தன் பதிலளிக்கும்போது “ஒரு சிறுபான்மைக்கட்சியொன்றின் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை. கட்சிக்குள் பல்வேறு அபிப்பிராயங்கள் இருந்தாலும், நாங்கள் அந்த பிரேரணையை ஆதரிக்கப் போவதில்லை“ என அழுத்தம் திருத்தமாக வாக்குறுதியளித்துள்ளார்.