தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் சிக்கினர்

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுதாரிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் இன்று அம்பாறை – கல்முனையில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடனும் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர்கள் புலனாய்வுப் பிரிவுகளுக்கு கிடைத்த தகவலையடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.