பின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது

கல்முனை- மருதமுனைப் பிரதேசத்தில் தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் உருவப் படம் பொறிக்கப்பட்ட போதனைப் புத்தகமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்​தேகத்துக்கிடமான இறுவட்டுகள், சிம் அட்டைகள் இரண்டுடனான தொலைபேசி என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று இரவு 8.45 மணியளவில் கல்முனை பொலிஸ் விசேட படையணியால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.