ஹிஸ்புல்லாவை மிஞ்சினார் அமீரலி!! வெளியானது திடுக்கிடும் ஆதாரங்கள்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தியாவெட்டுவான் பகுதியில் மற்றுமொரு பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் பிரதி அமைச்சர் அமீரலி அவர்கள் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தியாவெட்டுவான் என்ற இடத்தில் அமீரலி பொண்டேசன் ஊடாக செரண்டிப் பல்கலைகழகம் என்ற பெயரில் குறித்த பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளதாக ஆவணங்கள் சில வெளியாகியுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக தியாவெட்டுவான் பகுதியில் அரச காணிகள் 20 ஏக்கரை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் கடந்த 2017 ம் ஆண்டு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் ரிதிதென்ன பல்கலைகழகம் இஸ்லாமிய மதரீதியான பல்கலைக்கழகம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அமீரலி பௌண்டேசனால் அமைக்கப்படப்போகும் செரண்டிப் பல்கலைகழகம் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன.

அத்துடன் மட்டக்களப்பில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்யாது அங்கு புதியபாடநெறிகளை உள்வாங்காது இழுத்தடிப்புச் செய்துவரும் அரசாங் அமைச்சர்கள் ஆள் ஆளாளுக்குப் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு போட்டா போட்டி போட்டு வருவதன் நோக்கம் என்ன?

இதற்கான பணம் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது உள்ளிட்ட கேள்விகளை பல்கலைக்கழக மாணவர்கள் எழுப்பியுள்ளனர்.

இதுகள் நம்மட அரசியல் வாதிகளிற்கு தெரியாது இதைப்பார்த்ததும் இனி அவகளுக்கு கொண்டாட்டம் தான்.

நாளை மறுதினம் இனி அறிக்கை மயம் தான் அவர்கள் பாவம் என்ன செயவது இந்த தகவல் அவர்களை விட அரசியல் வாதிகளிற்குத் தான் இது முக்கியம் பாப்பம் என்ன நடக்குது என்று...