எச்.ராஜா - தமிழிசை உட்பட 5 வேட்பாளர்களும் படு தோல்வி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்ட 5 தொகுதிகளிலும் அக்கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதன்படி, சிவகங்கையில் எச்.ராஜா, தூத்துக்குடியில் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், இராமராதபுரத்தில் நயினார் நாகேந்திரன் என 5 வேட்பாளர்களும் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இதனைவிட, அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. கள்ளக்குறிச்சி, விருதுநகர், வட சென்னை, திருச்சி என 4 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 4 தொகுதிகளிலும் லும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இதேவேளை, தமிழக இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகின்றது. தந்போதைய நிலைவரப்படி இரு கட்சிகளும் தலா 11 இடங்களில் முன்னிலையில் உள்ளன.