சம்பந்தனை 14 வாக்குளால் பதற விட்ட ரணில்

அவசரகால சட்டத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி: கூட்டமைப்பு எதிர்ப்பு!

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

இன்று நடந்த வாக்கெடுப்பில் அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக 22 வாக்குகள் அளிக்கப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்தது. கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

வழமையாக அனைத்து விடயங்களிற்கும் ஆதரவளித்த கூட்டமைப்பு முதல் முறையாக ரணில் அரசை எதிர்த்து வாக்களித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

நாடாளுமன்றம் மீண்டும் ஜூன் 4ம் திகதி கூடும்.