இலங்கையில் பேரூந்துகளில் பயணிக்கும் மக்களுக்கு ஓர் நற்செய்தி!

இலங்கையில் பேருந்துகளுக்கான முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் புதிய டோக்கன் முறை ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் இணையம் மற்றும் GPS தொழில்நுட்பம் ஊடாக தூர பயணங்களுக்கான பயண ரிக்கெட்டினை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில் இந்த டோக்கன் முறை அறிமுகப்படுத்துவதன் மூலம், மிகவும் இலகுவாக பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பயணிகளின் சேவைகளை விரிவுப்படுத்துவதற்காக இந்த டோக்கன் முறை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, இதன் போது பயனாளர்களுக்கு இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக இந்த வசதியை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.