7 வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது சங்ரி-லா ஹோட்டல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு சங்ரி-லா ஹோட்டல் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக நாளை மாலை 6 மணி தொடக்கம் ஹோட்டல் பாவனையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று ஹோட்டல் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கொழும்பு கிங்ஸ்பரி, சினமன்லேக் மற்றும் சங்ரி-லா ஆகிய 3 நட்சத்திர ஹோட்டல்கள் மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் குறித்த ஹோட்டல்கள் புனரமைப்புச் செய்யப்பட்டன.

அதற்கமைய கிங்ஸ்பரி மற்றும் சினமன் ஹோட்டல்கள் இதற்கு முன்னர் திறக்கப்பட்டடிருந்தன.

இந்நிலையில், சங்ரி-லா ஹோட்டலின் புனரமைப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் தமது ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தோருக்கும் நிவாரணத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.