ஹிஸ்புல்லாவிற்கு பேரிடியான காத்தான்குடி! என்ன நடந்தது தெரியுமா?

கிழக்கு மாகாணத்தை அரபு நாடாக மாற்றும் முயற்சியில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா செயற்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

ஹிஸ்புல்லாவின் செயற்பாடு குறித்து காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனங்களின் பிரதிநிதியான அபூஸாலி உவைஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா தனது பதவி காலத்தில் காத்தான்குடியில் அரபு மயமாக்கலை மேற்கொண்டதாக சம்மேளனத்தின் பிரதிநிதி அபூஸாலி உவைஸ் தெரிவித்துள்ளார்.

விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று ஆஜரான அபூஸாலி உவைஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அரபு மயமாக்கல் முஸ்லிம்களின் கலாச்சாரம் அல்ல என்றும் அது சவூதி அரேபியாவில் ஏனைய நாடுகளின் பிரஜைகளை வெளியற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கொள்கை ஆகும்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் ஜயம்பதி விக்கிரமரத்ன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், முஸ்லிம்களின் மதவாத செய்றாடுகளுக்கு அரபு மயமாக்கல் உதவவில்லை என்பதை நிராகரித்தார்.

புனித குர்ஆனை விளங்கிக் கொள்வதற்காகவே அரபு படிப்பிக்கபப்டுகிறது என்றும் காத்தான் குடியில் அரபு எழுத்து சின்னங்களை ஏற்படுத்துவது அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். ஆனால், ஹிஸ்புல்லாவின் காலத்திலேயே இந்த அரபு சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தேசிய தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் 5 ஆம் வகுப்பு வரையே படித்துள்ளார். காத்தான் குடியிலுள்ள ஒரு அரபு நிலையத்திலும் குருணாகலாவில் உள்ள ஒரு மதரஸாவிலும் படித்தபோதிலும் அவரால் மௌலவியாக வருவதற்கான படிப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.

2006 ஆம் ஆண்டு காத்தான்குடியில் ஒரு அமைப்பை உருவாக்கிய சஹ்ரன் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு தன்னை ஒரு மிதவாதியாக காட்டினார். ஆனால் பின்னர் அவரது செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தது.

இது பற்றி பொலிஸாருக்கு தாம் அறிவித்ததுடன் எதிரான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அபூஸாலி உவைஸ் கூறினார்.

காத்தான்குடியிலிருந்து இப்படி முறைப்பாடு தனக்கு எதிராக இடம் பெறும் என கனவில் கூட ஹிஸ்புல்லா நினைத்திருக்க மாட்டார் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.