மீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா! ஆட்டத்தை ஆரம்பித்தார்...

தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவாளராக தான் செயற்பட்டவர் என்றும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் எப்போதும் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாக தான் செற்பட்டதாகவும், ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பார்க்கப்போனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா எவ்வளவு சாதுரியமாக ஏமாற்றியுள்ளார் என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

அவரது சகல சக்தியையும் பாவித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று செயற்பட்டவர்தான் ஹிஸ்புல்லா.

பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடந்த பின், மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே சென்று தேசிய பட்டியல் எம்.பியாக பதவி ஏற்றார்.

பின்னர இராஜாங்க அமைச்சராகவும், பின்னர் கிழக்கு மாகாண ஆளுநராகவும் நியமனம் பெற்றுள்ளார் என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எவ்வளவு தூரம் ஹிஸ்புல்லா ஏறமாற்றியுள்ளார் என்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும்.

இந்த நிலையில் தம்மை தெரிவு செய்த சிறுபான்மை மக்களைப்பற்றி சிந்திக்காமல் ஜனாதிபதி தம்மை ஏமாற்றிய ஒருவருக்கு உயர் பதவிகளை வழங்கியுள்ளார்.

கடந்த ஜனாதிபத்தி தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கும், சஹரான் என்பவர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் செயற்பட்டவர் எனவும், விசித்திரமான கருத்தை ஹிஸபுல்லா தெரிவித்திருப்பதானது அவர் மகிந்த ராஜபக்சவின் பக்கம் பாய்வதற்கு முடிவெடுத்துவிட்டார் போல் தெரிகின்றது.

எனவே ஹிஸ்புல்லா என்பவர் ஒரு கொள்கை இல்லாதவர். ஒரு சுயநல அரசியல் செய்கின்றவர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஹிஸ்புல்லா ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிலும், பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பின்னர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தற்போது அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நோக்கித் தாவ இருக்கின்றார்.

எனவே காலத்திற்குக் காலம் அரசியல் தலைவர்களை அவர் ஏமாற்றி அரசியல் செய்து வந்துள்ளார்.

அவர் பன்மைத்துவ சமூகத்தின் மத்தியில் அனைவரையும் அரவணைப்பது போன்றும், ஆளுநராக இருக்கும்போது வேறான கருத்துக்களையும், காத்தான்குடியில் அவரது கருத்து இன்னுமொரு வித்திலும் சொல்லியுள்ளார்.

எனவே ஹிஸ்புல்லாவின் நாக்கு பலவிதமாக இருக்கின்றதா அல்லது அவரது நோக்கு பலவிதமாக இருக்கின்றதா என்பது பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

எது எவ்வாறு அமைந்தலும் அவரது சுயநல, வியாபார, நிதியை ஈட்டிக் கொள்ளும் அரசியல், காணிகளை அதிகளவு வாங்கிக் கொள்ளும் அரசியல், தன்னுடைய சொத்துக்களைப் பெருக்கக்கூடிய, மக்களை ஏமாற்றக்கூடிய அரசியல் என்பவறை மிகவும் சாகஜமாக செய்து கொண்டிருக்கின்றார்.