இறுகியது ஹிஸ்புல்லாவின் வங்கிக்கணக்குகள்

முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவின் ஹிரா பவுண்டேசனின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைகழகத்தின் வங்கிக்கணக்கு விபரங்களை ஒப்படைக்கும்படி, ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை வங்கியில் வெளிநாட்டு பணங்களை பெற்றுக்கொள்ளும் துறையின் தலைவருக்கு, இன்று இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 2016 மார்ச் மாதத்தில் இருந்து மட்டக்களப்பு பல்கலைகழகத்தின் வங்கிக்கணக்கின் பணப்பரிமாற்ற அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளையில், மட்டக்களப்பு பல்கலைகழகத்தின் வங்கிக் கணக்கு செயற்படுகிறது.

மட்டக்களப்பு பல்கலைகழகத்திற்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதி பற்றிய விசாரணையை மேற்கொள்ளும்படி ஆணைக்குழுவிடம், தினியாவல பாலித தேரர் முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.