இலங்கைக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்ட இந்திய முப்படையின் பிரதிநிதிகள் 159 பேர் இன்று மீண்டும் நாடு திரும்ப உள்ளனர்.
இத்தகவலை இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
இந்திய முப்படைப்பிரதிநிதிகள் தமது மனைவிமார் சகிதம் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கான நல்லெண்ண சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டு இலங்கையின் சிறப்பு மிக்க சுற்றுலாத்தளங்களை பார்வையிட்டிருந்தனர்.
இந் நிலையில் இன்று பிற்பகல் அவர்கள் மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரகேடியர் தெரிவித்துள்ளார்.
இலங்கை - இந்திய படையினருக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த சுற்றுப்பயணம் அமையப்பெற்றிருந்தது.
இவ் விஜயத்தில் இந்திய இராணுவப்படையினர் 95பேரும் , கடற்படையினர் 32 பேர் மற்றும் விமானப்படையினர் 32 பேர் உள்ளடங்கலாக 159 பிரதிநிதிகள் பங்கு கொண்டிருந்தனர்.
இதே வேளை, பொசன் பௌர்னமி தினத்தை முன்னிட்டு இலங்கையின் முப்படை பிரதானிகள் 162பேர் இந்தியாவிற்கான யாத்திரையை கடந்த சனிக்கிழமை மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.