பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்! குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பிக் பாஸ் சீசன் 1, சீசன் 2, என்ற இரண்டு பாகமும் பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் இன்று(ஞாயிறு) ஆரம்பமாகவுள்ளது. பிக் பாஸ் சீசன் -3 யில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் கசிந்த வண்ணம்யுள்ளது.

ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மெல்ல, மெல்ல தீயாய் பற்றிக்கொண்டது. மக்களின் மனதை எளிதாக வெல்ல இந்த நிகழ்ச்சி பிரபலங்களுக்கு ஒரு பாலமாக அமைகிறது.

இந்தநிலையில், குறித்த நிகழ்ச்சியில் இரண்டு இலங்கையர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த இளம் தொகுப்பாளினி மற்றும் செய்திவாசிப்பாளரான Losliya பிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இவரது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே இதுவரை தெரிந்த இரகசியம் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளதாகவும், நேற்று காலை பிக்பாஸ் சீசன் – 3 படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேபோன்று யாழ் இளைஞன் ஒருவரும் பிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதுஎப்படியோ இலங்கையைச் சேர்ந்த இருவரும் அதுவும் வடக்கு கிழக்கினைச் சேர்ந்த தமிழ் பேசும் இருவர் பிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளமை சிறப்பான ஒரு விடயமே.