மட்டக்களப்பில் அரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்

மட்டக்களப்பில் அரச உயர் அதிகாரி தயாபரனின் செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோகத்தர்

வியாலேந்திரன் தற்போது மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலாராக கடமையாற்றும் தயாபரனே மட்டக்களப்பின் அரசாங்க அதிபராக நியமனம் பெறுவதற்கு சகல தகுதியும் உடையவர் என பாராளுமன்ற உறுப்பினர் வியாலேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புதூர் கிராமத்தில் விளையாட்டுக் கழகமொன்றுக்கு உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் மண்முனை வடக்குஇமட்டக்களப்பு பிரதேச செயலாளர் தயாபரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் தயாபரன் அவர்கள் இலங்கை நிருவாக சேவையில் மூத்த அதிகாரி எனவும் மிகவும் திறமையான - நேர்மையானவர் எனவும் தெரிவித்ததோடு விரைவில் தாம் சார்ந்த கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றும் அப்போது தயாபரன் அவர்களுக்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பதவி பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களின் இந்த உரையானது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது மண்முனை வடக்குஇமட்டக்களப்பு பிரதேச செயலாளராக பணியாற்றும் தயாபரன் அவர்கள் நியமனம் பெற்ற காலத்தில் இருந்தே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்.

ஊழல் - இலஞ்சம் - அலுவலக ஊழியர்களை துன்புறுத்துதல் மட்டுமின்றி பெண்களிடம் சேட்டை போன்ற பல குற்றச் சாட்டுக்கள் இவர் மீது பல தடவைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இவர் கடமையாற்றிய எந்தவொரு அலுவலகத்திலும் இவர் சுமூகமான முறையில் இடமாற்றம் பெறுவதில்லை.

எல்லா அலுவலகங்களில் இருந்தும் இவர் துரத்தியடிக்கப் படுவதே வழமை.சில வருடங்களுக்கு முன்னர் கூட இவர் செங்கலடி பிரதேச செயலாளராக பதவி ஏற்க முற்பட்டபோது - செயலக ஊழியர்களாலும் அப்பகுதி பொது மக்களாலும் துரத்தியடிக்கப்பட்டார்.

வெருகல் பிரதேச செயலாளராக கடமையாற்றிய காலத்தில் பல்வேறு ஊழல்களை செய்ததோடு வெளிநாடு செல்ல முற்படும் பெண்களுக்கு சான்றிதல் வழங்க இருபத்தையாயிரம் பெற்றதாகவும் பெண் உத்தியோகத்தர்கள் மீது பாலியல் இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டு உள்ளதுடன் வெருகல் முருகன் அலயத்தின் பாரியளவான நிதியினை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே திருகோணமலை மாவட்ட அரச அதிபரால் கட்டாயமாக மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என செயலக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அலுவலக நடவடிக்கைகளுக்கு புறம்பாக பலதடவைகள் பொது மக்களாலும் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு public service club இல் குடி வெறியில் சண்டையிட்டு தாக்கப்பட்டு பல மாதங்கள் வைத்திய சாலையில் இவர் இருந்தது பிரபலமான கதையாகும்.

மட்டக்களப்பு பிரதேச செயலாளராக பதவியேற்றதும் தனது தில்லாலன்கடி வேலைகளை மிக மும்புரமாக ஆரம்பித்துள்ளார்.

கிராம அபிவிருத்திச் சங்கங்களிடமும் தமது கருமங்களை முடிக்க வரும் பொது மக்களிடமும் அலுவலக தேவைக்கென பணம் பெறுவதாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு வரும் நிருமாண ஒப்பந்தங்களை தான் விரும்பும் ஒப்ந்தக்காரர்களுக்கு வழங்கிஇ அதற்காக நன்கொடை பெறுவதாகவும் அறியப்படுகிறது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் ஆலோசனைக்கமைய கல்லடிப்பாலத்தின் இறக்கத்திலுள்ள காணியினை முஸ்லிம் ஒருவருக்கு கைமாற்றுவதற்கு வசதியாக அக்காணி தனியார் காணி என அண்மையில் பிரகடனப்படுத்தினார்.

மட்டகளப்பு மாநகர சபையானது வீதி அபிவிருத்தி திட்டங்களை தனது வளங்களை பயன்படுத்தி நன்றாகவும் அதிக நீளமாகவும் விரைவாகவும் செய்து காட்டி மக்களின் பாராட்டை பெற்றது.

நாவற்குடா - சத்துருக்கொண்டான் மற்றும் புதூர் போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்ட பல வீதிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன.

இவ்வாறு மாநகர சபை மூலம் வீதிகள் போடப்பட்டால் தனக்கு கிடைக்கும் கமிசன் இல்லாமல் போகும் என்பதற்காக தயாபரன் இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

இதனால் மட்டக்களப்பு நகருக்கு கொண்டு வரப்பட்ட வீதிகள் - விளையாட்டுக் கழகங்களுக்கான நிதிகள் திரும்பி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தனது ஊழல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத அலுவலர்களை பல வழிகளிலும் துன்புறுத்தி அடிபணிய வைக்க முயற்சிப்பதாகவும் அங்கு பணிபுரியும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

அலுவலர்கள் மிக அவசியமான தங்களது விடுமுறைகளை பெறுவதற்கு கூட பெரும் சிரமத்தை ஏற்படுத்தி தங்களை சாதாரண மனிதர்கள் போல கூட இவர் நடத்துவதில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மையில் சிற்றூழியர் ஒருவரை ஏனைய அலுவலர்கள் முன்னிலையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவரது நடவடிக்கை காரணமாக பெண் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தயாபரனது இவ்வாறான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பல்வேறு தரப்புக்களாலும் அமைச்சுக்கு செய்யப்பப்ட்டுள்ள முறைப்பாடுகள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இக்குழு மட்டக்களப்புக்கு விஜயம் செய்து பல்வேறு தரப்பினரையும் விசாரணை செய்து தனது அறிக்கையினை அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை செய்ய பிரதேச செயலாளரின் நடவடிக்கைகள் தடையாக இருப்பதால் தயாபரனை அமைச்சில் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறியக்கூடியதவுள்ளது.

ஆனால் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தயாபரனுக்கு ஆதரவாக உள்ளதாக அறியப்படுகிறது.

இந்நிலையில் தயாபரன் தனது அடிவருடிகள் TMVP கட்சியின் ஆதரவாளர்கள் வியாலேந்திரனின் கறுப்பு பூனை படைகள் கொண்டு ஆர்ப்பாட்டத்தை செய்து தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்வதாக செய்திகள் கசிந்துள்ளன.

இந்த உதவிக்காக TMVP கட்சியின் மகளிர் அமைப்பு தலைவி செல்விக்கு மாதாந்தம் 50, 000 ரூபா கொடுப்பனவுடன் கூடிய ஆறு மாத இந்திய கருத்தரங்கு ஒன்றை தயாபரன் செய்தி கொடுத்துள்ளாராம்.

ஊழல் பேர்வழிகளுக்கு ஆதரவாக TMVP கட்சியின் மகளிர் அமைப்பு தலைவி செல்வி செயற்படுவது குறித்து TMVP கட்சியின்தலைவர் பிள்ளையான் கடுப்பில் உள்ளாராம்.

நிலைமை இவ்வாறிருக்கஇ பல்வேறு ஊழல்களில் ஈடுபடும் தயாபரனை அரசாங்க அதிபராக நியமிக்கும் வியாழேந்திரனின் முயற்சி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கு முன்னரும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் - பாரிய மோசடிகளை செய்த முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி சார்ல்ஸ் அம்மையார் மற்றும் அவரது குழுவுக்கு ஆதரவாக செயற்பட்டு தனது தனிப்பட்ட தேவைகளையும் சலுகைகளையும் நிறைவேற்றிக் கொண்டார் என குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடப்பட்டது.