கொழும்பிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பால் கல்முனையில் உண்ணாவிரதமிருந்த பிக்குவும், குருக்களும் சிதறியோடிய பகீர் தகவல்

கடந்த சனிக்கிழமை (22) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பார்வையிட ஞானசார தேரர் சென்றிருந்தார்.

இதன்போது ஞானசார தேரர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு போராட்டகாரர்களிடம் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் கூட உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலைக்கு சென்று வந்து நீராகாரம் மாத்திரம் எடுத்து விட்டு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் அந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராஜன் எதுவும் அருந்தாமல் தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (23) போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய ஞானசார தேரர் அங்கிருந்த பிக்குவை தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளார்.

அத்துடன் இன்று உண்ணாவிரத பந்தலில் தொடர்ந்து இருந்தால் நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது என தொலைபேசி வாயிலாக மிரட்டியுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஞானசாரர் தொலைபேசி அழைப்பின் தொடர்பை துண்டித்ததுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்கும், குருக்களும் பந்தலின் பின் வழியால் சிதறி ஓடியுள்ளதாக தெரியவருகிறது.

இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருந்த ராஜன் யாரும் கூறாமல் உண்ணாவிரதத்தை நிறுத்துவதாக அறிவித்தார்.

ஞானசார தேரர் மைத்திரி கையாண்டு வருவது அவரின் விடுதலையில் இருந்தே அனைவருக்கும் புலப்பட்டு வருகிறது.

அத்துடன் கல்முனை தமிழர் உண்ணாவிரதத்திற்கு செல்ல முன் கடந்த வெள்ளிக்கிழமை ஹாரிஸ் எம்பியுடன் ஞானசார தேரர் நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் மக்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்குடன் பெறுமதி மிக்க உண்ணாவிரதத்தை நீர்த்து போக செய்தார் மைத்திரிபால சிறிசேன.

அமைச்சர்களும் த.தே.கூட்டமைப்பின் எம்பிக்களும் சென்றபோதே உறுதியை ஏற்று உண்ணாவிரதத்தை நிறுத்தியிருந்தால் ஏதாவது பலன் கிடைத்திருக்கும்.

ஆனால் இன்று பெறுமதியான போராட்டத்தை அனைவரும் எள்ளி நகையாடும் நிலை ஏற்பட்டு விட்டது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் அடிப்படை உரிமையாக இருக்கிறது.

இதனை தடுப்பதற்கும், மறுக்கவும் கடும்போக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு உரிமை கிடையாது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அனுபவம் இல்லாதவர்கள் கையாண்டதால் உண்ணாவிரத ஏற்பட்டாளர்களே திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கு தமிழ் பிரதேச செயலகம் எடுப்பதா இல்லையா என்பதற்கு அப்பால் இந்த பந்தலுக்கு வரும் மக்களை பழிதீர்க்க வேண்டும் என்ற குரோதமே உண்ணாவிரத போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடம் காணப்பட்டுள்ளது.

அதனை நிறைவேற்ற பெறுமதியான போராட்டத்திற்கு களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது. இனியாவது சரியான பாதையில் செல்ல முயற்சிப்பாளர்களா அல்லது உணர்வுகளை மட்டும் திணித்து புத்தியை மழுங்கடித்து தமிழர்களின் வீரத்தை வீதியால் செல்பவன் எல்லாம் எள்ளி நகையாட விடுவார்களா இந்த ஏற்பாட்டாளர்கள்.

ஏற்பாட்டாளர்களே சிந்தியுங்கள் இது உங்களின் குறுகிய அரசியல் நலுனுக்கான விடயம் அல்ல.

இது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குரிய விடயமாக காணப்படுகிறது. உங்கள் அரசியல் நலுனுக்காக அப்பாவி தமிழர்களின் நலன்களை கூறுபோட்டு விற்காதீர்கள்.

அத்துடன் போராட்ட களத்தில் பௌத்த துறவிகள் மற்றும் இந்து குருக்கள் உண்ணாவிரதம் இருந்தது பொதுவாக பார்க்கப்படுகிறது.

பொது நபர்கள் தவிர்ந்து அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டமை குழப்பகரமான விடயமாக காணப்படுகிறது.

பொதுவானவர்கள் இருக்கும் போது அது பொதுவாகவே பார்க்கப்படும். இந்தவிடயத்தில் அரசியல்வாதிகள் நுழைந்தமை மிகப்பெரும் தவறு.

அது மட்டுமில்லாமல் கிழக்கில் அரசியல் அநாதையாக திரியும் கருணா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பிள்ளையான் அணியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் ஆகியோர் இதனை தமக்கு சாதகமான அரசியலாக்கியதுடன் என்ன பேசுவது என தெரியாமல் வீர வசனம் பேசியதும் இந்த போராட்டம் நீர்த்து போக காரணம்.

கடந்த காலத்தில் பத்து வருடங்கள் பிரதியமைச்சராகவும், ஸ்ரீலங்கா சுந்திர கட்சியின் பிரதித் தலைவராகவும் இந்த கருணா எதையும் செய்யவில்லை.

அக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணசபையின் முதல்வராக இருந்த பிள்ளையானும் எதையும் செய்யவில்லை.

கிடைத்த சந்தரப்பத்தை பயன்படுத்தாமல் அன்று அசாத் மௌலானா இல்லாவிட்டால் பிள்ளையானுக்கு தூக்கம் வராது. அலிசாஹிர் மௌலானா இல்லாவிட்டால் கருணாவுக்கு உணவு இறங்காது.

இப்படியானவர்கள் இன்று போராட்ட களத்தை கானல் நீராக்கி விட்டனர். மக்களே உங்களின் பிரச்சினையை உங்களை முன்னிறுத்த கேளுங்கள்.

கையாலாகாத அரசியல்வாதிகளை மேடைக்கு வெளியில் வையுங்கள் வெறும் பார்வையாளர்களாக, பங்குபற்றுனர்களாக இல்லை.

தியாகத்திற்கும், வீரத்திற்கும் பெயர் போன தமிழினத்திற்கு எந்தவொரு உறுதிப்பாட்டையும் எழுதி வழங்காத வெறும் வார்த்தையில் கூறிய ஞானசார தேரரின் கருத்தும் மிரட்டலும் தமிழர்களுக்கு தீனியானது தான் இங்கு வேதனையான விடயம்.

மக்கள் சோர்வடையவில்லை. அவர்களின் போராட்ட குணம் குறையவில்லை. இதில் ஒரு முடிவினை பெறுவதற்கான ஓர் அரசியல் கூறு இருப்பதும் மறுப்பதற்கில்லை.