முதன் முறையாக சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்கள்

சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதிமன்றத்தில் சஹ்ரானின் மகளுடன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவரை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் உள்ள சிலருடன் சஹ்ரானிற்கு பணக்கொடுக்கல் வாங்கல் இருந்ததாக அவர் விசாரணையில் தெரிவித்தார்.

அதனடிப்படையில் இன்று கல்முனை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அது தொடர்பில் விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.

அந்த விவகாரத்தில் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தற்போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் அவரிடம் வாக்குலம் பெறப்பட்டு வருகிறது.

பணக்கொடுக்கல் வாங்கல் செய்ததாக அவரால் குறிப்பிடப்பட்ட சாய்ந்தமருது பகுதி வீடுகளிற்கு சென்றபோது, அந்த வீடுகள் ஆட்களற்று இருந்துள்ளன என்று குறிப்பிடப்படுகிறது. அங்கிருந்தவர்கள் தலைமறைவாகியிருக்கலாமென கருதப்படுகிறது.

பல முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றும் முஸ்லிம் வர்தகர்களிற்கும் சஹ்ரான் பணம் கொடுத்த விபரம் வெளிவரலாம் என கூறப்படுகிறது.