பிக்பாஸில் உள்ள இலங்கை போட்டியாளர் லொஸ்லியாவின் தந்தை கனடாவில்? மேலும் பல தகவல்கள்..

இந்தியாவிலுள்ள தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிலையில் முதல் இரண்டு பாகங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் -3 சில தினங்களும் முன் தொடங்கியது. இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லொஸ்லியா என்பவர் பங்குபெற்றுள்ளார்.

இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் செய்திவாசிப்பாளராகவும், தொகுப்பாளினியாகவும் இருந்தவர். இதேவேளை இவரை குறித்து அவரது நொருக்கிய தோழி ஒருவர் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரை பற்றி பல விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளியில் லொஸ்லியாவின் தந்தையை பற்றிய தோழியிடம் கேள்வி எமுப்பியுள்ளனர். அதற்கு அவர் பல தகவல்களை பதிவிட்டுள்ளார்.

லொஸ்லியாவின் தந்தை தற்போது குடும்பத்தை விட்டு கனடாவின் வேலை செய்துகொண்டுள்ளதாகவும், குடும்ப வறுமையின் காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்து கனடா சென்றதாகவும் அவரது தோழி தெரிவித்துள்ளார்.

மேலும் லொஸ்லியாவிற்கு மிகவும் பிடித்தது அவரது தந்தையை தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரு நாட்களுக்கு ஒருமுறை காணொளியில் லொஸ்லியாவும், அவரது தந்தையும் கதைத்துக்கொள்வர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கனடா போனதிலிருந்து லொஸ்லியாவும், அவரது குடும்பமும் தந்தையை நேரில் பார்த்தது இல்லை. காணொளி வாய்லாகவே இவர்கள் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் உள்ளதாக அவரது தோழி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தந்தை மீது அதிக பாசம் வைத்துள்ளவர் லொஸ்லியா என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தந்தையிடம் பேச முடியாமல் எப்படி இருக்க போகிறார் என்று தெரியவில்லை என்றும் அவரது தோழி குறிப்பிட்டுள்ளார்.