கடையில் கைவரிசையை காட்டிய ஆசாமியைத் தேடி பொலிசார் தேடுதல்

நுவரெலியா பஸ் நிலைய பகுதியில் மேல் மாடி கடை ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் பெறுமதி மிக்க இரண்டு கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளார்.

குறித்த நபர் இரண்டு கையடக்க தொலைபேசிகளை திருடும் விதம் கடையில் இருந்த சி.சி.டீ.வி யில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் ஜூன் 14 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த நபர் வெலிமட, பதுளை மற்றும் பண்டாரவளை பகுதிகளிலும் கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.